“உன் பிள்ளையோட வராத” கள்ளக்காதலன் சொன்ன அந்த வார்த்தை… மனசாட்சியே இல்லாமல் சாக்கடையில் வீசப்பட்ட 6 மாதக் குழந்தை… ஊரையே உலுக்கிய ஷபானா – விஷால் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் பிள்ளையோட வராத” கள்ளக்காதலன் சொன்ன அந்த வார்த்தை… மனசாட்சியே இல்லாமல் சாக்கடையில் வீசப்பட்ட 6 மாதக் குழந்தை… ஊரையே உலுக்கிய ஷபானா – விஷால் கொடூரம்..!!

Published

on

கள்ளக்காதல் வெறியால் பெற்ற தாயே தனது 6 மாதப் பிஞ்சு மகனைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் மீரட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டில் உள்ள ஒரு சாக்கடையில் இருந்து 6 மாதக் குழந்தை சமீரின் சடலம் ஜூலை 13 அன்று கண்டெடுக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய இந்த தகாத உறவால், பெற்ற தாயான ஷபானாவும் அவரது கள்ளக்காதலன் விஷாலும் சேர்ந்து அந்தப் பிஞ்சு உயிரைப் பறித்துள்ளனர்.

சஹாரன்பூரைச் சேர்ந்த இம்ரானின் மனைவி ஷபானாவுக்கு, ஹாபூரைச் சேர்ந்த விஷால் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது நெருங்கிய கள்ளக்காதலாக மாறியது. இருவரும் இணைந்து வாழத் திட்டமிட்ட நிலையில், ஜூலை 12 அன்று குழந்தைக்கு மருந்து வாங்கச் செல்வதாகக் கூறிவிட்டு ஷபானா தனது 6 மாதக் குழந்தை சமீருடன் வெளியேறியுள்ளார். திட்டமிட்டபடி மீரட்டிற்கு வந்த அவர், இரவு 11 மணியளவில் விஷாலைச் சந்தித்துள்ளார். ஆனால், குழந்தையுடன் வந்தால் தன் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிய விஷால், நண்பர் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்று சாக்கடையில் வீசிக் கொன்றுள்ளார். பின்னர் ஷபானா குழந்தை இல்லாமல் விஷாலுடன் ஹாபூருக்குச் சென்றுவிட்டார்.

Advertisement

காணாமல் போன மனைவியையும் மகனையும் தேடி அலைந்த கணவர் இம்ரான், ஜூலை 26 அன்று ஹாபூரில் ஷபானாவைக் கண்டுபிடித்தார். ஆனால் மகன் இல்லாதது குறித்து விசாரித்தபோது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. உடனே காவல்துறையினரின் உதவியுடன் மீரட்டில் மீட்கப்பட்ட குழந்தையின் புகைப்படங்களைக் காட்டிச் சரிபார்த்ததில், அது சமீர் தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்ட கள்ளக்காதலன் விஷால் மற்றும் தாய் ஷபானா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in