கொடூரத்தின் உச்சம்!.. பேத்தியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது தாத்தா.. 3 மாத கருவோடு காவல்நிலையம் ஏறிய 15 வயது சிறுமி.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

கொடூரத்தின் உச்சம்!.. பேத்தியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது தாத்தா.. 3 மாத கருவோடு காவல்நிலையம் ஏறிய 15 வயது சிறுமி.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!!

Published

on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தந்தை இல்லாத நிலையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களது குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான ராசு என்ற தாய்வழி தாத்தா, அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ராசுவைக் கண்டித்த பிறகும், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மீண்டும் சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராசுவைத் தாக்கி கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்ட அச்சிறுமியை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியும் அவரது தாயும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் போலீஸார் 73 வயதுடைய ராசு மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். தந்தை இல்லாத 15 வயது பேத்தியை தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in