“23 வயது காதலி… 19 வயது இளைஞன்… லாட்ஜில் விடிய விடிய நடந்த ‘அந்த’ காரியம்.. கதவைத் திறந்த நண்பர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி”..!! – cinefeeds
Connect with us

CRIME

“23 வயது காதலி… 19 வயது இளைஞன்… லாட்ஜில் விடிய விடிய நடந்த ‘அந்த’ காரியம்.. கதவைத் திறந்த நண்பர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி”..!!

Published

on

சத்தீஸ்கரில் காதலியுடன் தங்கியிருந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிலாயின் ‘கேம்ப்-1’ பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் (19), கோஹ்கா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை அவர் திடீரென சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 8-ஆம் தேதி மாலை லாட்ஜிற்கு வந்த ஷதாப் ஷேக், 23 வயது காதலியும் அறையில் மது அருந்தியபோது, ஷதாப்பின் முன்னாள் காதலியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. இந்த மோதலின் போது போதை தலைக்கேறிய தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு மயக்கமடைந்ததாகவும், அவர் இறந்துவிட்டதாக தவறாக நினைத்த ஷதாப், காதலியின் ஸ்கார்ஃப் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், இச்சம்பவம் கொலையாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அன்றைய இரவு இருவருக்கும் இடையே சண்டை நடப்பதை அறிந்து ஹோட்டலுக்கு வந்த ஷதாப்பின் நண்பர்கள் கதவைத் தட்டியும் பதில் கிடைக்காத நிலையில், மறுநாள் காலை அவரது காதலி “ஷதாப் தூங்கிக்கொண்டிருக்கிறார்” என்று ஹோட்டல் ஊழியர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் காலை 9 மணியளவில் நண்பர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அசைவற்று கிடந்த ஷதாப்பை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்மிருதி நகர் போலீசார், உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஹோட்டல் அறையில் நடந்த உண்மை நிகழ்வுகளைக் கண்டறிய ஷதாப்பின் காதலியைத் தற்போது காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in