CINEMA
அடுத்த ‘கொடி’ ரெடி?! விஜய் பாணியில் களமிறங்குகிறாரா தனுஷ்?.. தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்.. சோசியல் மீடியாவில் வெடித்த விவாதம்!
சினிமாவில் பன்முகத் திறமைகளைக் காட்டி உலகளவில் முத்திரை பதித்த தனுஷ், தற்போது தமிழக அரசியல் களத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார். அதற்கு பிள்ளையார் சுழி போட்டது அவரது அகில இந்திய ரசிகர் நற்பணி மன்றத்தினர் வெளியிட்ட புதிய கொடிதான். சிவப்பு, வெள்ளை நிறக் கூட்டணியில், தனுஷ் கைகூப்பி வரவேற்பது போல் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொடி, அச்சு அசலாக ஒரு அரசியல் கட்சியின் அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது. இதனால், “அடுத்த ரவுண்டுக்கு தனுஷ் ரெடியாகிவிட்டாரா?” என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இதுகுறித்து தனுஷிடம் நேரடியாக, “இந்தக் கொடி எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறுமா?” என அதிரடியாகக் கேள்வி எழுப்பினர். ஆனால், தனுஷ் புன்னகையுடனோ அல்லது மறுப்புடனோ பதிலளிக்காமல், மௌனமாகத் தனது காரை நோக்கிச் சென்று அங்கிருந்து கிளம்பினார். அவரது இந்த மௌனம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், ரசிகர்களிடையே சஸ்பென்ஸை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அண்ணன் விஜய்யின் அரசியல் பயணம் தந்த உத்வேகத்தில், தனுஷும் தன் அரசியல் கணக்குகளை அமைதியாகத் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டையும் தாண்டித் தமிழக அரசியலிலும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
