LATEST NEWS
அடேங்கப்பா.. “1 லிட்டர் பால் இவ்வுளவா?.. சாதாரண கழுதை இல்ல… கோடிகளில் புரளும் பிசினஸ்..!” தொழிலதிபர்களை வியக்க வைத்த புதிய ட்ரெண்ட்.. இணையத்தைக் கலக்கும் வைரல் உண்மை!
கழுதை என்றாலே மட்டமாக நினைக்கும் பலருக்கு, அதன் பால் லிட்டருக்கு இந்தியாவில் ரூ.9,000 வரை விற்கப்படுகிறது என்ற உண்மை பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இதற்கான முதன்மையான காரணம் அதன் மிகக் குறைந்த உற்பத்தித்திறன் தான். ஒரு கழுதையால் ஒரு நாளைக்கு வெறும் 200 முதல் 300 மில்லி பால் மட்டுமே தர முடியும். இதனால் ஒரு லிட்டர் பாலைச் சேகரிப்பதற்குப் பல நாட்கள் உழைப்பும், ஏராளமான கழுதைகளும் தேவைப்படுகின்றன. சந்தையில் இதன் உற்பத்தி மிகவும் குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருப்பதால், உலகின் அரிதான மற்றும் மிகவும் விலையுயர்ந்த பாலாக இது கருதப்படுகிறது.
दुनिया की सबसे महंगी दूध जिसका कीमत जानकर हैरान रह जाओगे आप।
जिस गधी को लोग अक्सर मज़ाक उड़ाने के लिए इस्तेमाल करते हैं,
उसी का दूध भारत में ₹9,000 प्रति लीटर तक बिक सकता है।
इसकी सबसे बड़ी वजह है कि एक गधी
पूरे दिन में सिर्फ़ 200–300 ml दूध ही देती है।
यानी एक लीटर दूध… pic.twitter.com/KhvC27DjQQ— Wallah Habebe Hindi Version (@Wallahhabebe) August 6, 2026
விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்கள், பிரீமியம் சரும பராமரிப்புப் பொருட்கள் மற்றும் சில சிறப்பு மருத்துவப் பொருட்களின் தயாரிப்பில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதே இதன் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். மக்கள் அலட்சியமாகப் பார்க்கும் ஒரு விலங்கு, இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வணிகமாக உருவெடுத்துள்ளது வியப்பளிக்கிறது. உலகில் விலையுயர்ந்த பொருட்கள் எல்லாமே தங்கம் அல்லது வைரம் மட்டுமல்ல; சில பொருட்களின் உண்மையான மதிப்பை அவற்றின் அரிதான தன்மையே தீர்மானிக்கிறது என்பதை இது நிருபிக்கிறது.
