“இந்த கேரக்டருக்கு இவங்களா?” நோலனை வச்சு செய்யும் ரசிகர்கள்… ரிலீசுக்கு முன் வெடித்த சர்ச்சை!..ஷாக்கில் ஹாலிவுட்! – cinefeeds
Connect with us

CINEMA

“இந்த கேரக்டருக்கு இவங்களா?” நோலனை வச்சு செய்யும் ரசிகர்கள்… ரிலீசுக்கு முன் வெடித்த சர்ச்சை!..ஷாக்கில் ஹாலிவுட்!

Published

on

உலகெங்கிலும் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் பிரம்மாண்ட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் என்றாலே அதற்கென ஒரு தனி மவுசு உண்டு. எந்தவொரு விமர்சனத்தையும் பார்க்காமல், ‘நோலன் படம்’ என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிவது வழக்கம். அப்படியொரு உச்சகட்ட எதிர்பார்ப்பில், அவரது இயக்கத்தில் அடுத்த வாரம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள திரைப்படம்தான் ‘தி ஒடிசி’ (The Odyssey). ஆனால், சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் இறுதி ட்ரைலர், ஹாலிவுட் திரையுலகிலேயே அதிக ‘டிஸ்லைக்குகளை’ (Dislike) பெற்ற ட்ரைலர் என்ற மோசமான விமர்சனத்தைப் பெற்று ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரலாறு காணாத எதிர்ப்பிற்கான முக்கியக் காரணம், இப்படத்தின் கதாபாத்திரத் தேர்வுதான் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ‘ஹெலன் ஆஃப் ட்ராய்’ (Helen of Troy) போன்ற இதிகாச முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களுக்குத் துளியும் சம்பந்தமில்லாத, சற்றும் பொருந்தாத நடிகர்களை நோலன் தேர்வு செய்துள்ளார் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மையைக் கெடுக்கும் வகையிலான இந்தத் தேர்வால் அதிருப்தியடைந்த நெட்டிசன்கள், சமூக வலைத்தளங்களில் நோலனை மிகக் கடுமையாக விமர்சித்து வருவது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in