CINEMA
நம்பவே முடியல?பிரபல ஹீரோயினா இது..!ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ஷாக்கிங் வீடியோ..இணையதளத்தில் வைரல்..!!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரக்ஷிதா. சிம்புவுடன் ‘தம்’, தளபதி விஜய்யுடன் ‘மதுர’ என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். குறிப்பாக, ‘தம்’ படத்தில் இடம்பெற்ற “சாணக்யா சாணக்யா”, ‘மதுர’ படத்தில் வரும் “எலந்த பயம்” போன்ற பாடல்கள் இன்றும் இசைப்பிரியர்களின் ஃபேவரைட். கன்னட இயக்குனர் பிரேமை திருமணம் செய்துகொண்ட பிறகு முழுநேர நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர், அவ்வப்போது திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இதனால் பல வருடங்களாகவே அவர் பொதுவெளியிலோ, மீடியாக்களிலோ பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்தார்.
இந்த நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரக்ஷிதாவின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஒரு காலத்தில் துறுதுறுவென வலம் வந்த ரக்ஷிதாவா இது? ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி மாறிவிட்டாரே!” என கடும் அதிர்ச்சியுடன் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவருடைய இந்த தோற்ற மாற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குப் பிடித்த நடிகையை மீண்டும் திரையில் பார்ப்பது 90ஸ் கிட்ஸ்களுக்கு பெரும் நெகிழ்ச்சியைத் தந்துள்ளது. தற்போது இந்த வீடியோவை வைத்து பலரும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து இணையத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
