அழுகாச்சி டிராமாவுக்கு எண்ட் கார்டு… ஃபங்க் ஹேர்ஸ்டைலில் மாஸ் காட்டும் தனுஷ்..தனுஷ் – ஸ்ரீலீலா போட்டோஸ் லீக்… செம குத்தாட்டத்திற்கு ரெடியான ‘ஓம்’…! – cinefeeds
Connect with us

CINEMA

அழுகாச்சி டிராமாவுக்கு எண்ட் கார்டு… ஃபங்க் ஹேர்ஸ்டைலில் மாஸ் காட்டும் தனுஷ்..தனுஷ் – ஸ்ரீலீலா போட்டோஸ் லீக்… செம குத்தாட்டத்திற்கு ரெடியான ‘ஓம்’…!

Published

on

‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணையும் புதிய படத்திற்கு ‘ஓம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சாய் அபயங்கரின் அதிரடியான பின்னணி இசையுடன் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டிரைக் க்ளிம்ப்ஸ் வீடியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும், இதனைப் பார்த்த பலரும் இது ‘புஷ்பா’ படம் போல இருப்பதாகக் கூறினர். இதற்கு விளக்கம் அளித்த இயக்குநர், இது வெறும் முதல் சாப்டர் மட்டும்தான் என்றும், திருவண்ணாமலையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தால் உருவான கதை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன், இட்லி கடை, கர போன்ற படங்கள் பெரும்பாலும் எமோஷனல் மற்றும் அழுகாச்சி டிராமாக்களாகவே இருந்ததால் அவரது ரசிகர்கள் சற்று சோர்வடைந்திருந்தனர். ‘மாரி 2’ படத்தில் சாய் பல்லவியுடன் தனுஷ் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் 1 பில்லியன் வியூஸ்களைக் கடந்து சாதனை படைத்ததைப் போல, தனுஷின் துள்ளலான நடிப்பையும் நடனத்தையும் மீண்டும் பார்க்க மாட்டோமா என்று ரசிகர்கள் ஏங்கினர். அவர்களின் அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், நடனப் புயல்களான சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலாவுடன் இணைந்து தனுஷ் ‘ஓம்’ படத்தில் தியேட்டர்களை அதிரவைக்கக் காத்திருக்கிறார். ரசிகர்களின் பல்ஸை நன்கு அறிந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சாண்டி மாஸ்டர் இயக்கத்தில் ஒரு பக்காவான குத்தாட்டப் பாடலை இதில் உருவாக்கியுள்ளார்.

Advertisement

இந்நிலையில், ‘ஓம்’ படத்தின் பாடல் காட்சியிலிருந்து தனுஷ் மற்றும் ஸ்ரீலீலாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி பயங்கர வைரலாகி வருகின்றன. அதில் கிழிந்த ஜீன்ஸ் பேன்ட்டுடன் ஸ்ரீலீலா நடனமாட, ஃபங்க் ஹேர்ஸ்டைலுடன் தனுஷ் மாஸாக ஸ்டெப் போடும் காட்சிகள் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த புகைப்படங்கள் முழுக்க முழுக்க ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், படத்தின் உண்மையான காட்சிகள் இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த லீக் புகைப்படங்கள் குறித்து படக்குழுவினர் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், தனுஷை மீண்டும் பழைய துள்ளலான பாணியில் பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in