நள்ளிரவில் வாணவேடிக்கை…எம்.ஜி.ஆருக்குப் பின் இவர்தானா?… ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய விஜய்…அமைச்சர் கீர்த்தனாவுடன் ஜெய் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்…இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…! – cinefeeds
Connect with us

CINEMA

நள்ளிரவில் வாணவேடிக்கை…எம்.ஜி.ஆருக்குப் பின் இவர்தானா?… ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய விஜய்…அமைச்சர் கீர்த்தனாவுடன் ஜெய் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்…இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!

Published

on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (ஜூன் 22) தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா தம்பதியின் மகனாகப் பிறந்து, குழந்தை நட்சத்திரமாகத் தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜய், ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘பூவே உனக்காக’ திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து, அவரை முன்னணி நடிகர்கள் வரிசையில் உயர்த்தியது. தொடர்ந்து ‘கில்லி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பாக்ஸ் ஆபீஸில் ரஜினிகாந்துக்கு இணையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய அவர், ‘லியோ’ போன்ற படங்கள் மூலம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து, தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் மாஸ் ஹீரோவாக சிம்மாசனம் அமைத்தார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தபோதே, மக்கள் சேவைக்காக அனைத்தையும் துறந்து அரசியல் களத்தில் குதித்தார் விஜய். எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு மாஸ் ஹீரோவால் அரசியல் கட்சியைத் தொடங்கி ஆட்சிக்கட்டிலை எட்ட முடியுமா என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், பல தடைகளைக் கடந்து தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நடிகர் ஜெய், அமைச்சர் கீர்த்தனா உள்ளிட்ட திரைத்துறையினரும், அரசியல் பிரமுகர்களும் வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாகக் கொண்டாடித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

பொதுவாக விஜய் பிறந்தநாள் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலம் பூணும். ஆனால், நேற்று பெரியபாளையத்தில் உள்ள இறால் நிறுவனத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான அமோனியா வாயு கசிவு விபத்து மற்றும் உயிரிழப்புகள் காரணமாகப் பாதிப்புக்குள்ளானவர்களைக் காப்பாற்ற அரசு இயந்திரம் போராடி வருகிறது. இந்தத் துயரமான சூழ்நிலை காரணமாக, விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு அமைதி காப்பார் என்றே தெரிகிறது. இருப்பினும், அவரது அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகத்தினரும், தளபதி ரசிகர்கள் பலரும் தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி இந்த நாளை நற்பணி நாளாகக் கொண்டு செலுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in