“சால்னா கடை விமர்சகருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது!”.. சிஎம் விஜய்யை ஓப்பனாக வறுத்தெடுத்த துரைமுருகன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சால்னா கடை விமர்சகருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது!”.. சிஎம் விஜய்யை ஓப்பனாக வறுத்தெடுத்த துரைமுருகன்..!!

Published

on

“சால்னா கடை விமர்சகர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று முதலமைச்சர் விஜய்யை திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், சொந்த பலத்தில் இல்லாமல், ஊரான் பலத்தை நம்பிப் பிழைப்பவருக்கு இவ்வளவு தர்பார் மற்றும் பந்தா தேவையில்லை என்று மிக நேரடியான அரசியல் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

முன்னதாக, கொளத்தூர் தொகுதியில் மக்கள் ஐந்து நிமிடங்களில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள் என்று திமுகவை வம்புக்கு இழுக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே அமைச்சர் துரைமுருகன், சால்னா கடையையும் கொத்து பரோட்டாவையும் ஒப்பிட்டு முதலமைச்சரின் அரசியல் விமர்சனங்களைக் கிண்டல் செய்துள்ளார்; இவர்களின் இந்த அடுத்தடுத்த வார்த்தைப் போர் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in