LATEST NEWS
“ஓடு.. ஓடு.. ஓடு”.. அன்று யார் ஓட்டுனது யாருனு எல்லாருக்கும் தெரியும்.. தளபதி பாணியிலேயே மரண மாஸ் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி..!!
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று முதன்முறையாக கரூருக்கு நேரில் சென்றார். விபத்தில் தவித்த குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் கண்ணீரைத் துடைத்தவர், அரசு பணி நியமன ஆணைகளை வழங்கி ஆறுதல் அளித்தார். தொடர்ந்து மக்களிடையே உணர்வுப்பூர்வமாக உரையாற்றிய அவர், “மக்களின் பாதுகாப்பே அரசின் முதல் கடமை” என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார். அப்போது திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்த விஜய், கரூர் துயரச் சம்பவத்தின் போது திமுகவினர் ஓடிப்போய் ஒளிந்துகொண்டதாகக் கூறி, “ஓடு ஓடு ஓடு” என்ற பாடலைப் பாடி சாடினார். மேலும், இச்சம்பவம் குறித்துப் பேச திமுகவிற்குத் திராணி இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் விஜய்யின் இந்த நேரடி அரசியல் தாக்குதல் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கும் விதமாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் சம்பவம் நடந்த போது, மக்களுக்குத் துணையாக நின்று காப்பாற்றியவர்கள் அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கூட்ட நெரிசலில் மக்கள் மயங்கி விழுந்த சூழலில் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தது யார் என்றும், திருச்சி விமான நிலையத்தில் மக்கள் உயிரிழந்த செய்தி அறிந்தும் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் விஜய் பாணியிலேயே “ஓடு.. ஓடு.. ஓடு..” எனக் கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் தற்போது தீவிரமாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
