“5 வயது சிறுமி முதல் பெண்கள் வரை”.. பாலியல் ஆசையைக் குறைக்க அரங்கேறும் பயங்கரம்.. உலகையே உலுக்கும் ‘அந்த’ கொடூர சடங்கு..!! – cinefeeds
Connect with us

CRIME

“5 வயது சிறுமி முதல் பெண்கள் வரை”.. பாலியல் ஆசையைக் குறைக்க அரங்கேறும் பயங்கரம்.. உலகையே உலுக்கும் ‘அந்த’ கொடூர சடங்கு..!!

Published

on

பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் உலகம் முழுவதும் தொடரும் வேளையில், அதன் உச்சக்கட்ட கொடூரமாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்ற சடங்கு இன்றும் அரங்கேறி வருகிறது. சிறுமிகளை வலுக்கட்டாயமாகக் கட்டிவைத்து அவர்களின் பிறப்புறுப்புப் பகுதிகளை வெட்டி தைக்கும் இந்த கொடூர பழக்கத்தால் உலகளவில் 23 கோடிக்கும் அதிகமான பெண்களும் சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதில் 63 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் காம்பியாவில் மூன்றில் இரண்டு பங்கு சிறுமிகள் 5 வயதுக்கு முன்பே சிதைக்கப்பட்டுள்ளனர். பெண்களின் பாலியல் ஆசையைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று மதப் பாரம்பரியவாதிகளும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு வக்காலத்து வாங்குவதுடன், 2015-ல் கொண்டு வரப்பட்ட FGM தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றம் வரை போராட்டங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

கடுமையான இரத்தப்போக்கு, தொற்று, மலட்டுத்தன்மை, பிரசவக் காலச் சிக்கல்கள் மற்றும் மரணம் போன்ற பேரழிவுகளை ஏற்படுத்தும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகப் பெண் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்தத் தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை ஒழிப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், FGM தடையை ரத்து செய்யக் கோரும் மசோதா நாடாளுமன்றத்தில் 35-க்கு 17 என்ற வாக்கு வித்தியாசத்தில் சட்டமியற்றுபவர்களால் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு வானமே எல்லை என்று பேசப்படும் இந்த நவீன AI தொழில்நுட்ப யுகத்திலும், கலாச்சாரம் மற்றும் மத சுதந்திரத்தின் பெயரால் சிறுமிகளின் உடல் நலம் சிதைக்கப்படும் இந்த அவலம் தொடர்ந்து அரங்கேறி வந்தாலும், பெண்களின் உரிமைகளை மீட்கும் போராட்டக் குரல்கள் இன்னும் ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in