CRIME
“வாங்க பேசிக்கிட்டு இருக்கலாம்..!” ஆசையா கூப்பிட்டு இப்படியா பண்ணுவீங்க..? பாட்டியைக் கொன்றுவிட்டு சினிமா ஸ்டைலில் கள்ளகாதலர்கள் செய்த காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியைச் சேர்ந்த பூச்சியம்மாள் என்ற மூதாட்டி, அக்கம் பக்கத்தில் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமானார். மறுநாள் காலை அங்குள்ள அரசுப் பள்ளி அருகிலுள்ள கால்வாயில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த சதுர்வேதமங்கலம் போலீசார், மோப்ப நாய் ‘லைலா’ மற்றும் தனிப்படை உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பூச்சியம்மாளின் கணவர் மாதவன் கொடுத்த தகவலின்படி, அதே பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவரின் வீட்டிற்கு பூச்சியம்மாள் சென்றது தெரியவந்தது.
போலீசார் நடத்திய சோதனையில், மோப்ப நாய் லைலா சடலம் இருந்த இடத்திலிருந்து நேரடியாக சாமுண்டீஸ்வரியின் வீட்டிற்குச் சென்று படுத்துக்கொண்டது. மேலும், நள்ளிரவில் சாமுண்டீஸ்வரியின் கார் சென்று வந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. இதன் அடிப்படையில் சாமுண்டீஸ்வரி மற்றும் அவரது கள்ளக்காதலன் சரவணன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், சாமுண்டீஸ்வரியின் காரில் உள்ள கியர் பாக்ஸில் பூச்சியம்மாளின் 10 ½ பவுன் நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாட்டிக்கொண்ட இருவரும் கொலையை ஒப்புக் கொண்டனர்.
சரவணனுக்கு இருந்த கடன் பிரச்சினையைத் தீர்க்க, எப்போதும் நகைகளுடன் இருக்கும் பூச்சியம்மாளைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். சாமுண்டீஸ்வரி ஆசையாகப் பேசி வீட்டிற்கு அழைத்து வர, இருவரும் சேர்ந்து மூதாட்டியைப் போர்வையால் மூச்சுத்திணறடித்துக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் சடலத்தைச் சாக்குப்பையில் கட்டி நள்ளிரவில் கால்வாயில் வீசியுள்ளனர். தடையங்களை அழிக்க சினிமா பாணியில் மூதாட்டியின் உடலின் மீது சர்க்கரையைத் தூவி எறும்புகளை மொய்க்க விட்டுள்ளனர். ஊர் மக்களின் ஒத்துழைப்போடு, சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கொலையாளிகள் இருவரையும் கைது செய்தனர்.
