CRIME
பெரிய குளறுபடி.. கண் விழித்துப் பார்த்த நோயாளிக்கு காத்திருந்த மரண பயம்.. மருத்துவர் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்.. கதறும் குடும்பத்தினர்.. திடுக்கிடும் பின்னணி..
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனையில், இடது கண்ணிற்குப் பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்கம்மா என்ற பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இடது கண்ணில் பாதிப்பு இருந்ததால், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். ஆனால், அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்கள் செய்த மிகப்பெரிய குளறுபடியால், மாற்றி அவரது வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை முடிந்து அந்தப் பெண் வெளியே வந்த பிறகு, அவரது கண்ணில் இருந்த கட்டுகளைப் பார்த்த குடும்பத்தினர் மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனை நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையின் இந்த அப்பட்டமான மருத்துவ அலட்சியம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், இத்தவறிற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது விரிவான விசாரணை நடத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய நீதி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.
