LATEST NEWS
ஷாக்..! தவெக ஜெயிச்சது எப்படி தெரியுமா..? பாஜகவின் அந்த சதி.. திருமாவளவன் போட்ட குண்டு… கூட்டணிக்குள் வெடித்த சர்ச்சை…!!
விசிக தலைவர் தொல். திருமாவளவன் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி நடவடிக்கை குறித்தும், இதனால் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பா.ஜ.க.விற்கு எதிரான வாக்குகளை நீக்கி, தமிழ்நாட்டில் ஒரு செயற்கையான மும்முனைப் போட்டியை உருவாக்கவே இந்த ‘SIR’ முறை பயன்படுத்தப்பட்டதாக அவர் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெகவின் தேர்தல் வெற்றிக்குத் தேர்தல் ஆணையத்தின் இந்த சர்ச்சைக்குரிய ‘SIR’ திருத்த நடவடிக்கையே காரணம் என்று அவர் பகிரங்கமாக விமர்சித்திருப்பது, தவெக மற்றும் பிற அரசியல் கட்சிகளிடையே தற்பொழுது கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமாவளவன் இந்த உரையை நிகழ்த்தினார். இந்த ‘SIR’ முறையானது முறையான வாக்காளர்களைச் சரிபார்க்கும் பணி அல்ல என்றும், எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமான வாக்கு வங்கிகளைத் திட்டமிட்டு சிதைக்கப் பா.ஜ.க. அரசுக்கு உதவும் ஒரு மறைமுக சதி என்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
