ச்சீ..! இவனெல்லாம் ஆசிரியரா..? “சார் என்னை அதற்கு அழைத்தார்” பள்ளிக்கு செல்ல மறுத்த மாணவன் சொன்ன அதிர்ச்சி உண்மை.. நடுநடுங்கிப்போன பெற்றோர்…!! – cinefeeds
Connect with us

CRIME

ச்சீ..! இவனெல்லாம் ஆசிரியரா..? “சார் என்னை அதற்கு அழைத்தார்” பள்ளிக்கு செல்ல மறுத்த மாணவன் சொன்ன அதிர்ச்சி உண்மை.. நடுநடுங்கிப்போன பெற்றோர்…!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தேவாலய சபை ஒன்றில் வேதாகமப் பாடம் பயின்று வந்த 7-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், மார்க்கப் பாட ஆசிரியர் ரோஸ்லின் வேதக்கண் என்பவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த சில நாட்களாக வேதாகம வகுப்புக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கியிருந்தான். இதனால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர், வகுப்புக்குச் செல்லாததற்கான காரணம் குறித்து அன்பாக விசாரித்தபோது, ஆசிரியர் ரோஸ்லின் வேதக்கண் தன்னை ஓரினச்சேர்க்கைக்குக் கட்டாயப்படுத்தி, பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அதிர்ச்சி உண்மையை அந்தச் சிறுவன் அழுதுகொண்டே வெளிப்படுத்தினான்.

Advertisement

மகனின் வாக்குமூலத்தைக் கேட்டு நிலைகுலைந்த அவனது தந்தை, இதுகுறித்து உடனடியாகக் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தந்தையின் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஆசிரியர் ரோஸ்லின் வேதக்கண்ணை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in