LATEST NEWS
மாணவர்கள் தலையில் இடி..! அமெரிக்காவில் படிக்கப் போன இந்தியர்களுக்கு வந்த சோதனை… விசாவுக்கு ரூ.96 லட்சம்..? பெரிய அப்பக்க வைத்த அதிபர் டிரம்ப்…!!
அமெரிக்காவில் உயர்கல்வி படித்து முடித்த சர்வதேச மாணவர்கள் அங்கேயே தங்கிப் பணியாற்றுவதற்கான விசா நடைமுறைகளில், அதிபர் டிரம்ப் நிர்வாகம் சுமார் 96 லட்சம் ரூபாய் வரை புதிய கட்டணத்தை விதிக்க தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. எப்1 விசா மூலம் அமெரிக்கா சென்று கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள், தங்களது படிப்பிற்குப் பிறகு பணி அனுபவம் பெறுவதற்காக வழங்கப்படும் ‘ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்’ திட்டத்தைக் குறிவைத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வரும் இந்த முன்மொழிவு குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மேலும், இவ்வளவு பெரிய தொகையை மாணவர்களே நேரடியாகச் செலுத்த வேண்டுமா அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் ஏற்க வேண்டுமா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் தற்போது 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவதால், சர்வதேச மாணவர் குழுக்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். ஒருவேளை இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு வேலை தேட விரும்பும் இந்திய மாணவர்களின் எதிர்காலக் கனவுகளுக்கு இது மிகப்பெரிய நிதித் தடையாகவும், பெரும் அதிர்ச்சியாகவும் அமையும்.
