அடேய் என்னமா நடிக்கிறீங்க..? போலீஸ் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது… நொண்டி நொடி நடந்து வந்த கைதிகள்.. அடுத்தது தான் பெரிய டுவிஸ்ட்டே… ₹20,000 லஞ்சப் புகாரால் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேய் என்னமா நடிக்கிறீங்க..? போலீஸ் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது… நொண்டி நொடி நடந்து வந்த கைதிகள்.. அடுத்தது தான் பெரிய டுவிஸ்ட்டே… ₹20,000 லஞ்சப் புகாரால் பரபரப்பு..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், காவல் நிலையத்திற்குள் நொண்டிக் கொண்டே சென்ற குற்றவாளிகள், வெளியில் வந்தவுடன் கைகளில் கட்டப்பட்டிருந்த போலி மாவுக்கட்டை அவிழ்த்து எறிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் ஹீரா நகர் போலீசார் சிலரை அண்மையில் கைது செய்தனர். அப்போது, அவர்கள் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகக் கூறி, கைகளில் மாவுக்கட்டு மற்றும் கட்டுகளுடன் போலீசார் அவர்களை அழைத்துச் சென்றனர்.

ஆனால், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்ட மற்றொரு புதிய வீடியோவில், அந்த நபர்கள் எவ்வித வலியும் இன்றி சாதாரணமாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது. மேலும், தங்களின் கைகளில் கட்டப்பட்டிருந்த போலி பிளாஸ்டர் மற்றும் கட்டுகளை அவர்களே கழற்றி நடுத்தெருவில் வீசி எறிந்துள்ளனர். குற்றவாளிகள் காயமடைந்தது போல் போலீசார் நாடகமாடினார்களா என்ற பலத்த சந்தேகத்தை இந்த வீடியோ சமூக மக்களிடையே எழுப்பியுள்ளது.

Advertisement

இதற்கிடையே, இந்த விவகாரத்தை மூடி மறைக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு ₹20,000 லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்தூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோதியா இந்த விவகாரம் குறித்தும், போலீசாரின் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in