CINEMA
தனுஷுக்கு சினிமா பிடிக்கவில்லை… ஆரம்பத்துல அழுதுகிட்டே தான் நடிச்சான்…! தனுஷின் ரகசியத்தை உடைத்த தந்தை கஸ்தூரி ராஜா..!!
மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயண், நாக துர்கா நடித்துள்ள படம் ‘லவ் ஓ லவ்’. இதில் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினேஷ் ராஜ் மற்றும் ஜி தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ளனர். பாக்ஸ்ன் என்ற பெயரில் வலம் வரும் இரு இசையமைப்பாளர்கள் இதற்கு இசையமைத்துள்ளனர். இளைஞர்களின் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் நாளை(10.07.2026) வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் கஸ்தூரி ராஜா கலந்து கொண்டார். இவரின் பேரன் தான் பட நாயகன் பவிஷ் நாராயண் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் மேடையில் கஸ்தூரி ராஜா பேசுகையில், “தனது பிள்ளைகள் சினிமாத் துறைக்கு வரக்கூடாது என்பதில் இயக்குநர் கஸ்தூரி ராஜா ஆரம்பத்தில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார். படங்களின் சிறப்புத் திரையிடல்களுக்குக் கூட அவர்களை அழைத்துச் செல்லாமல் வளர்த்துள்ளார். மூத்த மகன் செல்வராகவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென படிப்பை முடித்துவிட்டு சினிமாவுக்குள் நுழைந்ததாகவும், அவர் ‘காதல் கொண்டேன்’ படம் மூலம் இவ்வளவு பெரிய இயக்குநராக உருவெடுப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கஸ்தூரி ராஜா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இளைய மகன் தனுஷ் குறித்துப் பேசிய அவர், ஆரம்பத்தில் தனுஷிற்கு நடிப்பிலோ அல்லது சினிமாத் துறையிலோ துளியும் விருப்பமில்லை என்ற அதிர்ச்சியான உண்மையை உடைத்துள்ளார். தனுஷ் நடிக்கத் தொடங்கிய தொடக்கக் காலத்தில், கிட்டத்தட்ட முதல் ஐந்து திரைப்படங்கள் வரை படப்பிடிப்புத் தளத்திற்கு வரப் பிடிக்காமல் அழுதுகொண்டேதான் தனுஷ் நடித்தார் என்று கஸ்தூரி ராஜா ஓபனாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த ஆரம்பக் கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவின் நுணுக்கங்களையும் அதன் சூழலையும் தனுஷ் மெதுவாகப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னரே தனுஷிற்கு சினிமாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, கடின உழைப்பால் இன்று ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி, உலகளவில் பாராட்டப்படும் மிகச்சிறந்த இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் இடத்தைப் பிடித்துக் கலக்கி வருகிறார் என்று தனுஷின் அசாத்திய வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார்.
