CINEMA
எனக்கு உடன்பாடுயில்லை!எம்.ஜி.ஆர் போட்ட கண்டிஷன்..!கேப்டன் கைநழுவிய ‘மெகா ஹிட்’ படத்தின் பின்னணி..இணையதளத்தில் வைரலாகும் பதிவு…!!
இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் பாதியிலேயே நின்றுபோன எம்.ஜி.ஆரின் படம் ஒன்றை, பிற்காலத்தில் தன் கைவண்ணத்தால் செப்பனிட்டு மாபெரும் வெற்றித் திரைப்படமாக மாற்றினார் ‘திரைக்கதை திலகம்’ பாக்யராஜ். ஆனால், ஆரம்பத்தில் இந்தத் திரைப்படத்தில் புரட்சிப் கலைஞர் விஜயகாந்தை நடிக்க வைக்கத்தான் முழு ஏற்பாடுகளும் நடந்துள்ளன. இது தொடர்பாக படத்தின் முக்கியப் புள்ளியிடம் “இயக்குனர் ஸ்ரீதரிடமும் இதைச் சொல்லிவிடுங்கள்” என்று ஒரு தகவல் பகிரப்பட, அவர் ஸ்ரீதரிடம் மட்டும் கூறாமல், நேரடியாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்த்துள்ளார்.
விஜயகாந்த் இந்த கதையில் நடிப்பதை அறிந்த எம்.ஜி.ஆர், அதற்கு சற்றும் உடன்படவில்லை. பாதியில் நின்ற தன் கனவுப் படத்தை விஜயகாந்த் நடிப்பதை விட, தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னனான பாக்யராஜே இயக்கி நடித்தால் தான் அதற்குரிய நியாயம் கிடைக்கும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் விருப்பப்படியே அந்தப் படம் பாக்யராஜின் கைக்கு மாறியது. பழைய பேட்டி ஒன்றில் இந்த சுவாரசியமான திரைமறைவு ரகசியத்தை பாக்யராஜ் உடைத்திருப்பது, தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
