CINEMA
சர்ப்ரைஸ்..!20 லட்ச ரூபாய் சொகுசு கார்!இயக்குனரை திக்குமுக்காட வைத்த சம்பவம்..பரிசளித்து அசத்திய சிவகார்த்திகேயன்!
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தால், அதன் இயக்குனருக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விலை உயர்ந்த கார் அல்லது பரிசுகளை வழங்கி கௌரவிப்பது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், நடிகர் சூர்யா செய்த அதே பாணியை தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் அப்படியே பின்பற்றியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் இயக்குனருக்கு, படம் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில் தற்போது பிரம்மாண்டமாக ஒரு வெற்றி விழாவை நடத்தி அசத்தியுள்ளார். இந்த விழாவில் சற்றும் எதிர்பாராத விதமாக இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தம் புதிய ‘மஹிந்திரா BE 6’ எலக்ட்ரிக் சொகுசு காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் எஸ்கே.
ராதிகா சரத்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ‘தாய் கிழவி’ திரைப்படம் உலகமுழுவதும் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது மட்டுமின்றி, திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையிலேயே படக்குழுவினருக்கு நட்சத்திர ஹோட்டலில் இந்த 100-வது நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறிமுக இயக்குனரான சிவகுமாரின் கடின உழைப்பையும், படத்தின் சமூக அக்கறையுள்ள கதையையும் பாராட்டும் விதமாகவே சிவகார்த்திகேயன் இந்த விலை உயர்ந்த மஹிந்திரா காரை பரிசளித்துள்ளார். தற்போது இந்த காரின் சாவியை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
