CINEMA
அந்த நேரத்தில் அதை கைகூப்பி வணங்காதீங்க, கோவிலுக்குள் இதுபோன்ற தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்க…!
நாம் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்கிறோம். அப்படி வழிபாடு செய்யும்போது சில தவறுகளை தெரியாமல் செய்வது இயல்பு என்றாலும் அதை நாம் சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் நம்முடைய ஆலய வழிபாட்டை முழுமை அடைய செய்கிறது.
கோவிலுக்கு செல்லும் போது நாம் செய்யக்கூடாத சில தவறுகள் குறித்து தெரிந்துக்கொள்வோம். கோவிலில் நாம் கொடிமரம் நந்தி பலிபீடம் ஆகியவற்றின் நிழல்களை மிதித்து வழிபாடு செய்யக் கூடாது. அதேபோல் விளக்கு இல்லாமல் அவை எரியாத நேரத்தில் நாம் அதை வணங்க கூடாது.
ஆலயத்தில் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும்போது பிரகாரத்தை சுற்றி வரக்கூடாது. கோவிலில் நந்தி மற்றும் மற்ற மூர்த்திகளையும் நாம் தொட்டு வணங்குதல் கூடாது. அதேபோல் கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.
கோவிலில் மனிதர்களுடைய காலில் விழுந்து வணங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு உடனடியாக கை கால்களை கழுவுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது.
சிவன் கோவிலுக்கு சென்றால் கட்டாயம் அங்கு சிறிது நேரம் அமர்ந்து விட்டு தான் வர வேண்டும். பெருமாள் கோவிலுக்கு சென்றால் அங்கு அமராமல் வந்து விட வேண்டும்.
முக்கியமான கோவிலுக்குள் மொபைல் போன் பேசுவதை தவிர்த்து அமைதி காக்க வேண்டும். கோவிலுக்குள் வீடியோ எடுப்பது செல்ஃபி எடுப்பது போன்ற அநாகரிக செயல்களை தவிர்க்க வேண்டும். இது போன்ற விஷயங்களை கட்டாயம் கோவிலுக்குள் பக்தர்கள் பின்பற்ற வேண்டும்.
