CINEMA
கல்யாணம் எப்போது..? முதலில் காதல், அப்புறம்தான் திருமணம்…! ரசிகர்களின் கேள்விக்கு த்ரிஷா கொடுத்த விளக்கம்..!!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் திருமணம் குறித்த அவரது பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் த்ரிஷா கலந்துகொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் அவரது திருமணம் எப்போது என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். தற்போது 43 வயதைக் கடந்துள்ள த்ரிஷாவுக்கு விரைவில் ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக உள்ளது.
திருமணம் மற்றும் உறவுகள் குறித்து த்ரிஷா மிகவும் தெளிவான மற்றும் வித்தியாசமான பார்வையை வைத்துள்ளார். சமூக அல்லது குடும்பக் கட்டாயத்திற்காக மட்டுமே ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். மேலும், ஒருவரைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்வதற்கே ‘டேட்டிங்’ உதவ வேண்டும் என்றும், விவாகரத்து செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் திருமணத்திற்கு முன்பாக நூறு முறை யோசித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதல் இல்லாத திருமண வாழ்க்கையைத் தான் விரும்பவில்லை என்று கூறும் த்ரிஷா, முதலில் உண்மையான காதல் இருக்க வேண்டும், அதன் பிறகே திருமணம் நடக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். தனக்கான சரியான வாழ்க்கைத் துணையைத் தேடி இன்னும் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற இவரது உறவு, சினிமாவை விட்டு விலக வேண்டும் என்ற நிபந்தனையால் முறிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
