CINEMA
“அய்யய்யோ… என்ன இப்படி சொல்லிட்டாரு?!”.. ‘ஜன நாயகன்’ பார்த்து அழுத அமைச்சரை வறுத்தெடுத்த புளூ சட்டை.. கொந்தளித்த விஜய் ரசிகர்கள்..!!
தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் திருவிழா கொண்டாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாலைக் காட்சியில் பாலாபிஷேகம், பட்டாசு என ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்த நிலையில், திரையரங்கில் விஜய்யின் என்ட்ரி காட்சியைக் கண்டு தவெக நிர்வாகியும் அமைச்சருமான பர்வேஸ் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. விஜய்யின் திரைப் பயணத்திற்கு இதுவே கடைசிப் படம் என்பதால் எழுந்த ஏக்கத்தின் காரணமாகவே அமைச்சர் கலங்கினார் என்று ஒரு தரப்பினரும், அரசியல் காரணங்களை முன்வைத்து மற்றொரு தரப்பினரும் என இணையத்தில் விவாதங்கள் வலுத்தன.
எல்லா பக்கமும் கேமரா. போதாததுக்கு ஃப்ளாஷ் லைட் வேற.
தவெக அமைச்சர் ஃபர்வேஸ்…ஜனநாயகன் பார்த்து அழுகிறார். pic.twitter.com/RdNmJ2WWA0— Blue Sattai Maran (@tamiltalkies) July 23, 2026
இந்த நிலையில், வழக்கம் போலத் தனது கிண்டலான பாணியில் களமிறங்கிய சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன், அமைச்சர் அழுது கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “இப்போ இத பார்த்து நாங்களும் அழுகணுமா?” எனக் கலாய்த்துப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு விஜய் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, “ஒருவரின் உண்மையான உணர்ச்சியைக் கூடவா கிண்டல் செய்வீர்கள்?” என்று மாறனை அவர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். மறுபுறம், மக்கள் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் ஒருவர் சினிமா பார்த்து இப்படி உணர்ச்சிவசப்படுவது தேவையா என்றும், படத்திலுள்ள அரசியல் சாடல்களைச் சுட்டிக்காட்டியும் எதிர்த்தரப்பினர் மாறனின் பதிவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
