என்னப்பா புதுசா இருக்கு..?! ஜூலை மாசத்துல பொங்கல் வாழ்த்து சொன்ன வெங்கட்பிரபு..!! – cinefeeds
Connect with us

CINEMA

என்னப்பா புதுசா இருக்கு..?! ஜூலை மாசத்துல பொங்கல் வாழ்த்து சொன்ன வெங்கட்பிரபு..!!

Published

on

முதலமைச்சர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு மக்களுக்குப் புதுமையாக ‘பொங்கல் வாழ்த்து’ தெரிவித்து அசத்தியுள்ளார். வழக்கமாக தை மாதப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக வேண்டிய இத்திரைப்படம், சில காரணங்களால் தாமதமாகி தற்போதுதான் திரைக்கு வந்துள்ளது. எனவே, படம் தாமதமாக ரிலீஸானாலும் “படம் வரும் நாளே பொங்கல் தான்” என்ற ரீதியில் அவர் இந்த வித்தியாசமான வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், தன் பதிவில் ‘CM’ விஜய் மற்றும் தான் இருவருமே வெள்ளை வேட்டி-சட்டையில் கம்பீரமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். வழக்கம்போலத் தனது நகைச்சுவை உணர்வோடும் ‘வெங்கட் பிரபு பிராண்ட்’ பாணியிலும் அவர் தந்துள்ள இந்த வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in