CINEMA
“அவர் நல்ல நடிகர்.. ஆனா நல்ல மனுஷனா நல்லவர் கிடையாது” வடிவேலுவின் முகத்திரையைக் கிழித்த நடிகை சோனா… பரபரக்கும் கோலிவுட்..!!
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு குறித்து நடிகை சோனா மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார், இது சினிமா வட்டாரங்களில் தற்பொழுது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. “கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி வடிவேலுவுடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்று சோனா முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது ஒரு நேர்காணலில் தனது அதே கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வடிவேலு ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதில் தனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறிய சோனா, “ஆனால் ஒரு மனிதனாக அவர் நல்லவர் கிடையாது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதனால்தான் அவருடன் நடிக்க மாட்டேன் என்று தான் முன்பு கூறியதாகவும், அந்த முடிவில் தற்போதும் எந்த மாற்றமும் இன்றி உறுதியாக இருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
