CINEMA
நடிகர் வடிவேலு தாக்கல் செய்த அவதூறு வழக்கு… சிங்கமுத்து பதிலளிக்க உத்தரவு…!!!
பல்வேறு சேனலுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், துளி கூட உண்மை இல்லாத பல பொய்களை கூறி தர குறைவாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் வடிவேலு. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் வடிவேலு வாக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் Youtube சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ஐந்து கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.