CINEMA
“பிரேம்ஜியால் தான் 45 வயது வரை கல்யாணம் ஆகலையா…”சினிமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! பிரேம்ஜி உடனான உறவு குறித்து சோனா சொன்ன ‘அந்த’ அதிர்ச்சி உண்மை!
தன் வாழ்க்கை வரலாற்றை ‘ஸ்மோக்’ (Smoke) என்ற பெயரில் வெப் தொடராக தயாரித்து வரும் நடிகை சோனா, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி உடனான தனது நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தங்களுக்குள் காதல் இருந்ததாகவும், அதனால்தான் பிரேம்ஜிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை என்றும் பரவி வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சினிமா துறையில் இதுபோன்ற வதந்திகள் சாதாரணமானவை என்று குறிப்பிட்ட அவர், பிரேம்ஜி தனக்கு ஒரு சகோதரர், சிறந்த நண்பர் (Bestie) என எந்த உறவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் தங்களுக்குள் காதல் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரேம்ஜியின் தனித்துவமான குணம் குறித்துப் பேசிய சோனா, படப்பிடிப்பில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் தன்னை அமைதிப்படுத்தும் நபராக பிரேம்ஜி இருந்தார் என்று நெகிழ்ந்துள்ளார். தனது வாழ்க்கையின் மிக முக்கியமான மற்றும் சிக்கலான காலகட்டங்களில் தனக்கு ஆதரவாக நின்று காப்பாற்றியவர் அவர்தான் என்று கூறியுள்ளார். நண்பர்கள் குழு ஒன்று மது அருந்திவிட்டு ஆட்டம் போடும்போது, ஒருவர் மட்டும் தெளிவாக இருந்து அனைவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வாரே, அதுபோன்ற ஒரு பொறுப்பான நண்பர்தான் பிரேம்ஜி என்று பாராட்டிய சோனா, தன்னை எப்போதும் அவர் ‘புரொடூசர் மேடம்’ என்றுதான் அழைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன் குறித்தும் சோனா சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் தனது அலுவலகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியதாகவும், பின்னர் திடீரென நயன்தாராவைச் சந்தித்து ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தைத் தொடங்கிய பிறகு தங்களது தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டார் என்றும் கூறியுள்ளார். அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றாலும், ஒரு நல்ல நண்பராகவும் சிறந்த குழுவாகவும் இருந்த விக்னேஷ் சிவன், திடீரென உறவை அப்படியே கட் செய்துவிட்டுச் சென்றது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சோனா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
