LATEST NEWS
அமைச்சர் ஆனந்திடம் பேசியது இதுதான்.. உண்மையை உடைத்து பேசிய சி.வி. சண்முகம்.. ஆடிப்போன அரசியல் வட்டாரம்..!!
அதிமுக மூத்த தலைவரான கே.பி.முனுசாமி மற்றும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அமைச்சர் N ஆனந்திடம் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் உட்கட்சி முரண்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் இத்தலைவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற தகவல்கள் பரவி வரும் சூழலில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், இச்சந்திப்பு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், இது முற்றிலும் தொகுதி வளர்ச்சி மற்றும் மக்கள் கோரிக்கைகள் தொடர்பான வழக்கமான சந்திப்பு மட்டுமே எனத் தெரிவித்து, அரசியல் ஊகங்களுக்கு மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். தங்களின் சுய அரசியல் முடிவுகள் குறித்த கேள்விகளைத் தவிர்த்த அவர், பொதுமக்கள் சார்ந்த பணிகளுக்காகவே அமைச்சரைச் சந்தித்ததாகக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.
