CRIME
“ரூமுக்குள் ஒரே டிவி சத்தம்” டிபன் சாப்பிட சென்ற காதலன்… OYO அறையை திறந்து பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. காதலி கிடந்த அந்த கோலம்..!!
ஹைதராபாத் அமீர்பேட்டில் உள்ள ‘கோகுல் பிரைட்’ OYO விடுதியில் பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விகாராபாத் மாவட்டம் தாரூர் மண்டலத்தைச் சேர்ந்த ஷிரீஷா (34) என்பவருக்கு கடந்த 2013-இல் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2016-இல் விவாகரத்து பெற்றார். அதன்பின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த அவர், எஸ்பிஐ வாடிக்கையாளர் சேவை மையத்தை நடத்தி வந்தார்.
இச்சூழலில், பெட்டேமுல் மண்டலம் ஒக்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ. ஸ்ரீனிவாஸ் (38) என்பவருடன் ஷிரீஷாவிற்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பெரியோர்கள் இவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால், இருவரும் நீதிமன்றத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் ஏற்காததால், இருவரும் அடிக்கடி ஹைதராபாத் சென்று விடுதிகளில் தங்கிவிட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 24-ஆம் தேதி துர்கா மற்றும் கணேஷ் என்ற போலி பெயர்களில் எஸ்.ஆர். நகர் பகுதியில் உள்ள ‘கோகுல் பிரைட்’ OYO விடுதியில் இருவரும் அறை எடுத்துத் தங்கினர். மறுநாள் காலையில், தான் வெளியே செல்வதாகவும், ஷிரீஷா காலை உணவை முடித்துவிட்டு அறையைக் காலி செய்வார் என்றும் ஊழியர்களிடம் கூறிவிட்டு ஸ்ரீனிவாஸ் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் ஷிரீஷா வெளியே வராததால், மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி ஊழியர்கள் அறையைத் திறந்தபோது அவர் பிணமாகக் கிடப்பைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், டிவியின் சப்தம் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்ததும், திரைச்சீலை கம்பியால் ஷிரீஷாவின் தலையில் பலமாகத் தாக்கி அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடிய ஸ்ரீனிவாஸை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இவர் ஏற்கனவே ஷிரீஷாவைத் தாக்கிய குற்றப்பின்னணி கொண்டவர் என்றும், பல இளம் பெண்களை அச்சுறுத்தியதற்காக இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
