“மரண பயங்கரம்.. பிரேக் பிடிக்காமல் பாய்ந்த ராணுவ வாகனம்..” டயருக்கு அடியில் சிக்கிய 4 பெண்கள்.. திக் திக் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மரண பயங்கரம்.. பிரேக் பிடிக்காமல் பாய்ந்த ராணுவ வாகனம்..” டயருக்கு அடியில் சிக்கிய 4 பெண்கள்.. திக் திக் வீடியோ..!!

Published

on

உத்தரகாண்ட் டேராடூன் மாவட்டத்தின் கல்சி தஹ்சிலுக்கு உட்பட்ட சாஹியா பகுதிக்கு அருகே, ராணுவ வாகனம் ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. சரிவான பாதையில் சென்று கொண்டிருந்த அந்த ராணுவ வாகனத்தின் பிரேக் பெயிலியர் ஆனதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இந்த அன்-கன்ட்ரோல்டு வாகனம் அந்த வழியே சென்ற பெண்கள் மீது மோதியதில், நான்கு பெண்கள் வாகனத்தின் அடியில் சிக்கி படுகாயமடைந்தனர்.

நூலிழையில் உயிர் தப்பிய அந்த நான்கு பெண்களும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களின் காயங்கள் மிகவும் தீவிரமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக உயர்தர மருத்துவ மையத்திற்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ராணுவ வாகனத்தின் பிரேக் செயலிழந்து கோர விபத்து நேரிட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in