LATEST NEWS
பகீர்.. ஆட்டோவால் நிலைதடுமாறி விழுந்த 29 வயது பெண்… பின்னால் வந்த டிராக்டர் செய்த கொடூரம்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!!
ஹைதராபாத் மீர்பேட் காவல் எல்லைக்குட்பட்ட படங்ஹ்பேட் பகுதியில் நடந்த கொடூர சாலை விபத்தில், நாதர்குல் கிராமத்தைச் சேர்ந்த 29 வயது பிரசன்னலக்ஷ்மி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஆட்டோவைக் கண்டு பயந்து திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் நிலைதடுமாறி சாலையில் அவர் கீழே விழுந்தார்.
அதே நேரத்தில் அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த டிராக்டரின் சக்கரம், கீழே விழுந்த அவரது தலையின் மீது ஏறி நசுக்கியதால், அவர் கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீர்பேட் போலீசார், பிரசன்னலக்ஷ்மியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
