LATEST NEWS
BREAKING: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மீண்டும் தங்கம்… சீனாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இந்திய மகளிர் வில்வித்தை அணி..!!
ஜப்பானின் ஐச்சி-நகாயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது ஜோதி சுரேகா வென்னம், தனிபர்த்தி சிகிலா மற்றும் பிரித்திகா பிரதீப் ஆகியோரைக் கொண்ட இந்தியக் கூட்டணி, விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த சீன அணியை 238 – 234 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதலிடத்தைக் கைப்பற்றியது.
இந்த இறுதிப் போட்டியின் போது இந்திய மகளிர் அணி மொத்தம் 238 புள்ளிகளைக் குவித்து அசத்தியது. இதன் மூலம், கடந்த 2014-ஆம் ஆண்டு இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தென் கொரிய அணி நிலைநாட்டியிருந்த உலக மற்றும் ஆசிய சாதனையை இந்திய மகளிர் அணி சமன் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. இந்திய வீராங்கனைகளின் இந்த அசாத்திய திறமைக்கும் துல்லியமான குறிபார்த்தல் முறைக்கும் நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
