LATEST NEWS
“நெஞ்சே பதறுது..” பள்ளிக்குச் சென்ற சிறுவன்… திடீரென கடித்துக் குதற பாய்ந்த குரங்கு கூட்டம்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவனை, திடீரென குரங்குகள் கூட்டம் சூழ்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. மதுராவின் தோலி பியாவ் பகுதியில் உள்ள ஒரு குறுகலான தெருவில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அச்சமயம் அந்தத் தெருவில் நடந்து வந்த சிறுவனை நோக்கி பாய்ந்த குரங்குகள், அவனை நிலத்தில் தள்ளி கடிக்க முயன்றன. பார்ப்பவர்களை உறைய வைக்கும் இந்த ஒட்டுமொத்தக் காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குரங்குகள் சிறுவனைத் தாக்கிய வேளையில், அந்தப் பகுதியில் பால் விநியோகம் செய்து கொண்டிருந்த ஒரு நபர்சற்றும் யோசிக்காமல் பெரும் தைரியத்துடன் முன்னோக்கி ஓடிவந்துள்ளார். அவர் குரங்குகளை நோக்கி சத்தமிட்டு விரட்டியதால், பயந்துபோன குரங்கு கூட்டம் சிறுவனை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. அந்தப் பால் காரரின் துரிதமான மற்றும் துணிச்சலான செயலால் அந்தச் சிறுவன் நல்வாய்ப்பாகப் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டான். இந்த பயங்கரமான சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
