CRIME
பகீர்..! தனிமையில் இருந்த காதல் ஜோடி.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்… இணையத்தை உலுக்கும் அத்துமீறல் வீடியோ..!!
பீகார் மாநிலத்தில் காதல் ஜோடிகளைத் தடுத்து நிறுத்தி அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஜமுய் மற்றும் சமஸ்திபூரைத் தொடர்ந்து, தற்பொழுது கயா மாவட்டத்தின் ஷேர்காட்டி காவல் எல்லைக்குட்பட்ட மஹுவாடிஹ் கிராம மலைப்பகுதியில் சுற்றுலாவிற்கு வந்த ஒரு காதல் ஜோடியை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு, அவர்களிடம் வம்பிழுத்துத் தாக்கிய கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில் மலைப்பகுதியில் அந்த ஜோடி நடந்து சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த சில உள்ளூர் இளைஞர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர். அந்த இளைஞர்கள் கையில் தடியுடன் ஜோடியை மிரட்டி, ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்தோடு நில்லாமல், அந்த ஜோடியின் இருசக்கர வாகனத்தின் சாவியைப் பறித்துக்கொண்டு, டயரின் காற்றையும் பிடுங்கி விட்டு அவர்களை நீண்ட நேரம் சிறைபிடித்துச் சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த மொத்த அத்துமீறலையும் அந்த ஆபாசக் கும்பலே வீடியோவாகப் பதிவு செய்து, இணையத்திலும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, கயா மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் சுஷில் குமார் உத்தரவின் பேரில் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, வீடியோ ஆதாரத்தைக் கொண்டு இரண்டு முக்கியக் குற்றவாளிகளை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
