LATEST NEWS
“அய்யயோ.. ரயில் முன் குதிக்க முயன்ற பெண்..” அலறிய குழந்தைகள்.. ரயில் நிலைய மாஸ்டர் செய்த அசாத்திய காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உர்குரா இரயில் நிலையத்தில் பணியில் இருந்த நிலைய மாஸ்டர் திரு. ஆனந்த் உபாத்யாய், தனது உயிரைப் பணைய வைத்து ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. நிலைய மாஸ்டர் கீழ்நோக்கி வரும் ரயிலை இயக்குவதற்கான சமிக்ஞையை வழங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த சிறு குழந்தைகள் சிலர் பீதியடைந்து சத்தமிட்டனர். அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரயிலின் முன் குதிக்கத் தயாராக இருப்பதாக அக்குழந்தைகள் கதறியபடி அவரிடம் தெரிவித்தனர்.
குழந்தைகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட திரு. ஆனந்த் உபாத்யாய், ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனடியாகச் செயல்பட்டார். தண்டவாளத்தை நோக்கி அதிவேகமாக வந்த ரயிலையும் பொருட்படுத்தாமல், அப்பெண்ணை நோக்கி விரைந்து சென்று அவரைப் பிடித்து இழுத்து பத்திரமாக மீட்டுக் காப்பாற்றினார். கடமையைத் தாண்டி மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அவரது இந்த அசாத்திய துணிச்சல், ஒட்டுமொத்த இரயில்வே குடும்பத்தின் உண்மையான அடையாளத்தையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
