LATEST NEWS
“10 வயதில் மும்பை வந்தவர்.. இன்று 75 வயது வரை ஸ்டீயரிங் பிடிக்கும் கைகள்..” நெட்டிசன்களை கலங்க வைக்கும் முதியவர் கண்ணீர் கதை..!!
மும்பையின் வீதிகளில் டாக்ஸி ஓட்டும் 75 வயது முதியவர் ஃபூல்சந்த் குப்தாவின் வாழ்க்கை வரலாறு, கேட்போர் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. தனது 10 வயதில் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிழைப்பு தேடி மும்பைக்கு வந்த இவர், தற்போது புற்றுநோயால் மனைவியை இழந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். முதுமை காரணமாக உடல் முழுவதும் கடுமையான வலி இருந்தபோதிலும், பசியின் கொடுமையால் தினசரி சுமார் 60 கிலோமீட்டர் தூரம் டாக்ஸி ஓட்டி வருகிறார். உடல் உபாதைகள் காரணமாக இவரால் வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடிகிறது.
ஃபூல்சந்தின் இந்த அவல நிலை வெறும் ஒரு முதியவரின் கதை மட்டுமல்ல; இந்தியாவில் ஓய்வு பெறக் கூட வசதியின்றி, பசிக்காக முதுமையிலும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்களின் நிதர்சனமான பிரதிபலிப்பாகும். வறுமையும் வலியும் ஒருபுறம் வாட்டினாலும், வாழ்க்கையை வெறும் சுமையாகக் கடத்தாமல், தன் சுயமரியாதையுடன் போராடி வாழும் இவரது இந்த வாழ்க்கை நெகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
