கதற கதற நடந்த கொடூரம்… 10 வருஷத்துக்கு அப்புறம் அம்பலமான உண்மை… ஜெம் வீரமணி மீது அடுத்தடுத்து பாயும் போக்சோ வழக்குகள்…! தீவிரமடையும் விசாரணை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கதற கதற நடந்த கொடூரம்… 10 வருஷத்துக்கு அப்புறம் அம்பலமான உண்மை… ஜெம் வீரமணி மீது அடுத்தடுத்து பாயும் போக்சோ வழக்குகள்…! தீவிரமடையும் விசாரணை..!!

Published

on

தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக செயல்பட்ட சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டு, சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தொழில் அதிபர் வீரமணியால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அச்சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வீரமணி மீது புதிதாக மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஜெம் வீரமணி மீது 2 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

இதனிடையே, வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக 93453-19676 என்ற செல்போன் எண்ணை சிறப்பு புலனாய்வு படையினர் வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணில் பேசியோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்றும், புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வீரமணியிடம் பணம் பறித்தவர்கள் குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in