“ஐயோ கடவுளே..” கோயிலுக்குச் சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… பட்டப்பகலில் அத்துமீறய மர்ம கும்பல்..தமிழகத்தை உலுக்கிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கடவுளே..” கோயிலுக்குச் சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… பட்டப்பகலில் அத்துமீறய மர்ம கும்பல்..தமிழகத்தை உலுக்கிய பகீர் சம்பவம்..!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, கோயிலிருந்து வீடு திரும்பிய சரஸ்வதி என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி, அவரது நகைகளைப் பறித்துச் சென்ற கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார்தோப்பு பகுதியைச் சேர்ந்த அந்த மூதாட்டி, அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு தனியாக நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென அவரது வழிமறித்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அப்போது கொள்ளையர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர்; அதனை சரஸ்வதி தடுத்தபோது, ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த கத்திக் குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இரக்கமின்றி மூதாட்டியின் காதை அறுத்து, அவர் அணிந்திருந்த கம்மலையும் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடினர். இரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள செய்யாறு போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க தீவிர வலை வீச்சு நடத்தி தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in