“நாங்க எப்படி எக்ஸாமுக்கு போறது..?” நிற்காமல் பறந்த அரசு பேருந்து.. மாணவி செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாங்க எப்படி எக்ஸாமுக்கு போறது..?” நிற்காமல் பறந்த அரசு பேருந்து.. மாணவி செய்த அதிரடி காரியம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

கர்நாடகாவின் கொப்பல் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோதிலும், அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த மாணவி பேருந்தை ஓடிச் சென்று மறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு நேரத்தின்போது பேருந்து நிறுத்தாமல் சென்றதால், தேர்வுக்குத் தாமதமாகிவிடுமோ என்ற கடுமையான பதற்றத்தில் அந்த மாணவி பேருந்தைத் துரத்திச் சென்று நடுரோட்டில் மறித்துள்ளார். பின்னர் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம், “நீங்கள் பேருந்தை நிறுத்தவில்லை என்றால், நாங்கள் எப்படித் தேர்வுக்குச் செல்வது?” என்று நியாயமாகக் கேள்வி எழுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததாலும், இருக்கும் பேருந்துகளும் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாலும் மாணவர்கள் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் முக்கிய நேரங்களில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர் பேருந்தை மறித்துக் கேள்வி கேட்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in