“அடக் கொடுமையே.. 17 ஆண் நண்பர்களுடன் பார்ட்டிக்கு போன 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..” கல்லறையைத் தோண்டிய CBI… வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. 14 ஆண்டுகளாக தீர்க்கப்படாத மர்மம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக் கொடுமையே.. 17 ஆண் நண்பர்களுடன் பார்ட்டிக்கு போன 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..” கல்லறையைத் தோண்டிய CBI… வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. 14 ஆண்டுகளாக தீர்க்கப்படாத மர்மம்..!!

Published

on

19 வயது ஃபேஷன் டிசைனிங் மாணவியான சனம் ஹசன், கடந்த 2012ஆம் ஆண்டு புனேயில் உள்ள தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பிறந்தநாள் பார்ட்டிக்குச் சென்றபோது இந்த மர்ம மரணம் நிகழ்ந்தது. மறுநாள் காலையில் அவர் சுயநினைவின்றி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அதிகப்படியான மது அருந்தியதால் ஏற்பட்ட மாரடைப்பே மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. மேலும், அவரது உடலில் உடலுறவுக்கான தடயங்கள் மற்றும் விந்து மாதிரிகள் கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் போலீசார் மற்றும் சிஐடி, அந்த பார்ட்டியில் சனமுடன் இருந்த 17 நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரித்தனர். ஆனால், வியப்பூட்டும் விதமாக அந்த 17 பேரின் டிஎன்ஏ-வும் சனமின் உடலில் கண்டறியப்பட்ட விந்து மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை. உள்ளூர் காவல்துறையின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததாலும், தடயங்கள் மறைக்கப்படுவதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியதாலும், 2014ஆம் ஆண்டு இந்த மர்ம மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

வழக்கை கையில் எடுத்த சிபிஐ, நீதிமன்ற உத்தரவின்படி 2016ஆம் ஆண்டு சனமின் உடலை கல்லறையிலிருந்து தோண்டி எடுத்து மீண்டும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியது. அப்போதுதான் இந்திய குற்றவியல் வரலாற்றையே உலுக்கிய அந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது; சனமின் உடலில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட இதயம் ஒரு ஆணின் இதயம் என்பதும், பின்னர் அனுப்பப்பட்ட மற்றொரு மாதிரி வயது முதிர்ந்த பெண்ணின் இதயம் என்பதும் தெரியவந்தது. ஆரம்பக்கட்ட பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களின் அலட்சியத்தால் சனமின் அசல் இதயம் முற்றிலும் காணாமல் போனது. மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மிக முக்கியமான ஆதாரமான இதயமே காணாமல் போனதால், இந்த வழக்கின் குற்றவாளிகள் யார் என்பது இன்றுவரை கண்டறியப்படாமல் ஒரு தீர்க்கப்படாத மர்மமாகவே நீடிக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in