CINEMA
“வாழை” படம் குறித்து உணர்ச்சிபூர்வமான வரிகள்…. விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு வைரல்…!!
இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை படம் குறித்து உணர்ச்சிபூர்வமாக இன்ஸ்ட்டாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி பதிவிட்டுள்ளார். அதில் உன் வாழ்க்கையில் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரம்மிப்பாக இருந்தது. இப்போது “வாழை”யில் உன் வாழ்க்கையில் இருண்ட பக்கங்களை பார்த்த பிறகு உன் மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்து இருக்கிறது.
இனி உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறு கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறை சிறக்கு.ம் சிறப்பு காட்சிக்கு அழைத்தாய். மெய் சிலிர்த்து போனேன். ததிரையில் மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்ட் 23க்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
❤️ @mari_selvaraj உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது, #Vaazhai -ல் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன்… pic.twitter.com/d3X4LTy0Xh
— VigneshShivan (@VigneshShivN) August 20, 2024