CINEMA
“18 வருஷத்துக்கு முன்பே திருமணம்…”திவ்யா சத்யராஜ் நிஜமாவே சிங்கிள் தானா”கோபமே வரல.. செம காமெடி…”இந்த அடி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?” – பயில்வான் ரங்கநாதனின் வாயை அடைத்த சத்யராஜ் மகள்…!
திரையுலகில் பலரைப் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி பரபரப்பை ஏற்படுத்துபவர் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்து இணையத்தில் புயலைக் கிளப்பினார். “திவ்யா சத்யராஜுக்கு 18 வருடங்களுக்கு முன்பே சத்யராஜின் அக்கா மகன் மகேந்திரன் மன்றாடியாரோடு கோயம்புத்தூரில் திருமணம் நடந்து முடிந்தது என்றும், 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு கணவரை டார்ச்சர் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார்” என்றும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்தார். மேலும், தான் சத்யராஜிடம் பணம் வாங்கியதாக திவ்யா பொய் சொன்னதால் தான், அவரது வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றுவதாக பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.
பயில்வான் ரங்கநாதனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திவ்யா சத்யராஜ் தனது பாணியில் மிகவும் நக்கலாகவும், அதே நேரத்தில் நச்சென்றும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள யூடியூபர்களே, உங்களில் சிலர் எனக்கு இரண்டு முறை திருமணம் நடந்துவிட்டதாகவும், எனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறீர்கள். எனவே, தயவுசெய்து எனது இரண்டு திருமணங்களின் புகைப்படங்களையும், எனது மூன்று குழந்தைகளின் புகைப்படங்களையும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று சவால் விடுத்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பதிவிட்ட திவ்யா, “இதற்காக நான் கோபமாகவோ அல்லது வருத்தமாகவோ இல்லை. இது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. எனக்கு நீங்கள் வழங்கிய இந்த பொழுதுபோக்கிற்கும், எனது சாதாரண தோசையில் நீங்கள் சேர்த்துள்ள இந்த கூடுதல் ‘மசாலாவிற்கும்’ எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டு, இறுதியாக “இந்த அடி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?” எனக் கேட்டு பயில்வானின் வாயை அடைத்துள்ளார். திவ்யா சத்யராஜின் இந்த கூலான மற்றும் தைரியமான பதிலடி தற்போது நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
