LATEST NEWS
அடக்கடவுளே.. “மிகவும் வேதனையான சூழலில் ஜோ பைடன்..!” கண்ணீருடன் மகன் வெளியிட்ட பகீர் தகவல்..!!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்தில் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது பொதுவெளிக்கு வந்த நிலையில், ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலேயே அவர் இதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவரது உடல்நலப் பாதிப்பு காரணமாகப் பணிச்சுமை ஏற்பட்டபோது, அப்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் சில முக்கியப் பணிகளைக் கவனித்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவிக்காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த ஜோ பைடனின் உடல்நிலை தற்போது மேலும் கவலைக்கிடமாக மாறியுள்ளது குடும்பத்தினரிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீவிரமான மற்றும் கடினமான காலகட்டத்தில், தந்தைக்குத் தேவையான முழு ஆதரவையும் அன்பையும் குடும்பத்தினர் தொடர்ந்து வழங்கி வருவதாக ஹன்டர் பைடன் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
