“அண்ணன் நேரு 1000 மாடு வச்சிருக்காரு!” அவர் ஒரு பெரிய விவசாயிப்பா.. கே.என்.நேருவின் ரகசியத்தை உடைத்த எம்.ஆர்.கே; சட்டப்பேரவையில் வெடித்த சிரிப்பலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அண்ணன் நேரு 1000 மாடு வச்சிருக்காரு!” அவர் ஒரு பெரிய விவசாயிப்பா.. கே.என்.நேருவின் ரகசியத்தை உடைத்த எம்.ஆர்.கே; சட்டப்பேரவையில் வெடித்த சிரிப்பலை..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தவெக அரசை நோக்கி, “மேடையில் பேசுவது மிகவும் எளிது; ஆனால் ஆட்சிக்கு வந்து இப்போதுதான் 3 மாதங்கள் ஆகியிருக்கிறது. இனிமேல்தான் உங்களுக்கு உண்மையான கஷ்டமே தெரியப்போகிறது பாருங்கள்” என்று எதார்த்தமான முறையில் எச்சரித்து விவாதத்தைத் தொடங்கினார். தொடர்ந்து தவெக அமைச்சர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அவையிலிருந்த தனது கட்சித் தோழரான கே.என்.நேருவை சுட்டிக்காட்டி, “அண்ணன் நேரு ஒரு பெரிய விவசாயி; அவர் 1,000 மாடுகள் வளர்க்கிறார், 1,000 ஏக்கரில் விவசாயம் செய்கிறார்” என்று அடுக்கடுக்கான சுவாரசிய தகவல்களைக் கூறி அவையைக் கலகலப்பாக்கினார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இந்த எதார்த்தமான மற்றும் நகைச்சுவையான பேச்சைக் கேட்டதும் அவையிலிருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் தவெக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கி, குலுங்கிச் சிரித்தனர். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 3 மாத காலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே, நேருவின் விவசாயப் பின்னணியை வைத்து எம்.ஆர்.கே அடித்த இந்த கவுண்டர் பேரவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, தற்போதைய அரசியல் வட்டாரத்திலும் மிகவும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in