LATEST NEWS
“பட்டினப்பாக்கம் திட்டம் திடீர் ரத்து..?” தவெக அரசு எடுத்த அந்த அதிரடி மாற்று முடிவு.. தலைமைச் செயலகத்தின் புதிய முகவரி இதுதானா..? கசிந்த முக்கிய தகவல்..!!
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு மீனவ மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தவெக அரசு அத்திட்டத்தைக் கைவிடப் பரிசீலித்து வருகிறது. கடற்கரையோர மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, சென்னை தீவுத்திடல் பகுதியில் அமைந்துள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பல்லவன் இல்ல வளாகத்தில் மாற்று இடத்தை அமைக்க அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இருப்பினும், பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்த இறுதி முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எட்டப்படவில்லை. புதிய திட்டத்தின்படி, நிர்வாகப் பணிகள் மட்டுமே பல்லவன் இல்ல வளாகத்திற்கு மாற்றப்படலாம் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையிலேயே இயங்கக்கூடும் என்றும் தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ மற்றும் இறுதி அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
