“தனித்து களம் இறங்குகிறோம்”… கோவைக் கூட்டத்தில் மமக ஜவாஹிருல்லா போட்ட மாஸ்டர் பிளான்..! ஸ்டாலினுக்கு செக்..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தனித்து களம் இறங்குகிறோம்”… கோவைக் கூட்டத்தில் மமக ஜவாஹிருல்லா போட்ட மாஸ்டர் பிளான்..! ஸ்டாலினுக்கு செக்..?!

Published

on

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முடிவு செய்துள்ளார். கோவையில் நடைபெற்ற மமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கட்சிக்கு சாதகமாக உள்ள வார்டுகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அங்குள்ள மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்றும் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மமக தனித்து போட்டியிட வேண்டும் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜவாஹிருல்லாவின் இந்த திடீர் அறிவிப்பு, திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மமக, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை நோக்கி நகர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in