“இனி இது கட்டாயம்..” ‘அண்ணன் சீர்’ திட்டத்தில் திடீர் மாற்றம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி இது கட்டாயம்..” ‘அண்ணன் சீர்’ திட்டத்தில் திடீர் மாற்றம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Published

on

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த திருமணமாகும் பெண்களுக்குத் திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய புதிய உத்தரவின்படி, இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மணமகள் மற்றும் அவரது பெற்றோர் தங்களின் ஆதார் அட்டை விவரங்களைச் சமர்ப்பிப்பது இனி கட்டாயமாகும்.

இந்த அதிரடி மாற்றமானது, திட்டத்தின் பலன்கள் இடைத்தரகர்கள் இன்றி தகுதியான மற்றும் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே முறையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒருவேளை விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில், அவர்கள் ஆதார் சேர்க்கைக்கான சான்றைப் பயன்படுத்தி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதுவரை மாற்று அடையாள அட்டைகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in