“அந்த தாத்தா பேட் டச் பண்ணாரு..!” மிருகத்தனமாக நடந்துகொண்ட 54 வயது முதியவர்.. பிஞ்சுக் குழந்தைகள் கூறிய பகீர் வாக்குமூலம்.. . பேரதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அந்த தாத்தா பேட் டச் பண்ணாரு..!” மிருகத்தனமாக நடந்துகொண்ட 54 வயது முதியவர்.. பிஞ்சுக் குழந்தைகள் கூறிய பகீர் வாக்குமூலம்.. . பேரதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!

Published

on

திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 மற்றும் 4 வயதுடைய இரு சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த பாபு 54 வயது முதியவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன அச்சிறுமிகள் அங்கிருந்து தப்பி ஓடிவந்துத் தங்கள் பெற்றோரிடம் நடந்த விவரத்தைக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலிஸார் விசாரனை நடத்தி, பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், அவர்கள் தயக்கமின்றிப் பேசும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் விழிப்புணர்வு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். மேலும், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து உடனடியாகப் புகார் அளிக்க ‘1098’ என்ற சிறார்க் உதவி மைய எண்ணைத் (Child Helpline) தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in