எப்போதும் விஜய்யை எதிர்க்கும் ப்ளூ சட்டை மாறன்…”அடுத்த திமுகவின் பிராண்ட் அம்பாசிடர் வாட்டர் மெலன் திவாகரா…”தோல்வி தொடரும்.. நிச்சயம் தொடரும்!” – திமுகவின் புதிய அரசியல் களத்தை துவம்சம் செய்த ப்ளூ சட்டை மாறன்…! – cinefeeds
Connect with us

CINEMA

எப்போதும் விஜய்யை எதிர்க்கும் ப்ளூ சட்டை மாறன்…”அடுத்த திமுகவின் பிராண்ட் அம்பாசிடர் வாட்டர் மெலன் திவாகரா…”தோல்வி தொடரும்.. நிச்சயம் தொடரும்!” – திமுகவின் புதிய அரசியல் களத்தை துவம்சம் செய்த ப்ளூ சட்டை மாறன்…!

Published

on

சமூக வலைதளங்களில் கடந்த மே 30 மாலை முதலே ‘Gen Z DMK மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்’ என்ற நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் தான் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. திமுகவின் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்கள் மற்றும் சமூக வலைதள வாசிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியின் வீடியோ துணுக்குகளைப் பகிர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் திமுகவினரை கடுமையாகக் கிண்டலடித்து வருகின்றனர். இதற்குப் பதிலடியாக திமுக ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் எதிர் வாதங்களை முன்வைத்து வருவதால், இணையத்தில் தவெக Vs திமுக என அரசியல் களம் சூடேறியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இந்த மாநாடு குறித்து மிகவும் காட்டமான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் ஜூலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட செய்தியைப் பகிர்ந்துள்ள அவர், “அறிவார்ந்த இளம் சமூகத்தை கட்டமைப்பதே திமுகவின் Gen Z எனும் புதிய அரசியல் களம் வெல்ல உதவும். இதுபோன்றோரை முன்னிறுத்தினால் தோல்வி தொடரும். நிச்சயம் தொடரும். அடுத்து யார் உங்கள் Gen Z brand Ambassador? வாட்டர் மெலன் திவாகரா?” என்று திமுகவை நேரடியாகவே வறுத்தெடுத்துள்ளார்.

Advertisement

சினிமா விமர்சனங்களைத் தாண்டி, தமிழ்நாடு அரசியல் களத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்குத் தனது பாணியில் அதிரடியாகக் கருத்து தெரிவிப்பது ப்ளூ சட்டை மாறனின் வழக்கம். பல நேரங்களில் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ள மாறன், தற்போது திமுகவின் இந்த புதிய அரசியல் நகர்வைச் சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. “அரசியல் களத்தில் வெல்ல இளைய தலைமுறையினரை அறிவார்ந்த பாதையில் வழிநடத்த வேண்டுமே தவிர, இதுபோன்ற நபர்களை பிராண்ட் அம்பாசிடராக முன்னிறுத்தக் கூடாது” என்ற அவரது கருத்து நெட்டிசன்களிடையே தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in